இன்றைக்கு முப்பது வயதிலேயே 'மூட்டுவலி’ பிரச்னை ஆரம்பமாகிவிடுகிறது. எடை பற்றிய அக்கறையின்மை, உணவுப்பழக்கம், வாழ்க்கைச் சூழல் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். இதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், வலியிலிருந்து விடுபட முடியும்' என்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிசுப்பிரமணியம்.
எலும்பு மூட்டு்களில் வரும் பிரச்னைகள், அதற்கான சிகிச்சைகள், வரும் முன் காப்பது, வந்த பின் மீள்வது என, எலும்பு மூட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்கு, தெளிவான விளக்கங்கள் தருகிறார்.
'ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மெலிதல் நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த, அக்டோபர் 20ம் தேதி 'உலக ஆஸ்டியோபோேராசிஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. உடலில் கால்சியம் அளவு குறைவு மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிக அளவில் உள்ளது. 'மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் முடிவுபெறும் காலகட்டத்தில், 'ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோன் குறைபாட்டால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நோயின் முக்கியப் பிரச்னையே மிகவும் தாமதமாகக் கண்டறியப்படுவதுதான். அதனால், பெண்கள் 40 வயதிலேயே இதற்கான பிரத்யேக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவையெனில், ஸ்கேனிங்் செய்து கொள்ளலாம்.
நம் சருமமே சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. உடல் கால்சியத்தைக் கிரகிக்கவும், கிரகிக்கப்பட்ட கால்சியம் எலும்பில் சேருவதற்கும், வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைபாட்டை மாத்திரை அல்லது ஊசி மூலம் சரிசெய்துகொள்ளலாம்.
அதிக அளவில் கால்சியம் கிடைக்க, 'பால் குடிக்கலாமா?’ என்று கேட்பார்கள். பாலில் அதிக அளவில் புரதச்சத்தும், கொழுப்பும் உள்ளது. இதனால் உடல் பருமன் ஏற்படும். இவர்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுத்துக் கொள்ளலாம். உணவைத் தவிர்த்துவிட்டு, கால்சியம் மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. தினசரி உணவில் நிறைய காய்கறிகள், கீரை வகைகள், சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
எலும்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஊட்டச்சத்தான உணவும், உடற்பயிற்சியும் அவசியம். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் எலும்பை மிகவும் பாதிக்கும். அதிகமான காபி குடிப்பதால், அதில் உள்ள கேஃபைன் (Caffeine) எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கோலா வகைகளில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை, எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற்றி
விடும். அதிகப்படியான புரதச்சத்தும் எலும்புக்கு நல்லதல்ல. கால்சியம் தேவைக்கு வேர்க்கடலை, பாதாம் போன்ற கொட்டை வகைகள் மற்றும் காய்களை எடுத்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது' என்கிறார்.
எஸ்.விஜயஷாலினி
அன்பு வாசகர்களே, அக்டோபர் 16 முதல் 31ம் தேதி வரை தினமும் 044 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், எலும்பு தேய்மானம், எலும்பு அடர்த்தி குறைவு போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் ரவிசுப்பிரமணியம்.
யாருக்கெல்லாம் எலும்பு தேயும்?
குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு முதலுதவி என்ன?
'ஆர்த்தோஸ்கோபி’ அறுவைசிகிச்சை என்றால் என்ன?
வைட்டமின் டியின் அவசியம் என்ன?
கழுத்து வலி, முதுகுவலி ஏன் ஏற்படுகிறது?
உடற்பயிற்சியின் அவசியம் என்ன?
தோள்பட்டை நழுவுதல் என்றால் என்ன?
எலும்பை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது?
ஃப்ளாட் ஃபுட் என்றால் என்ன?
0 comments:
Post a Comment