கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்- Vomiting of pregnancy - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்- Vomiting of pregnancy - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, October 4, 2014

    கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்- Vomiting of pregnancy

    கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்
    கர்பகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை மார்னிங் சிக்னெஸ் என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் இது காலை நேரத்திலேயே ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி நாள் முழுதும் கூட நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தி வருவது சகஜமானதே.

    இது சகஜமான போதிலும் நீண்ட நாட்களுக்கு வாந்தி நீடித்தால் அது பெண்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். உணவு மீது வெறுப்பு ஏற்படும். இதனால் தாய் பலவீனமடைந்து கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேராமல் எடையிழப்பு ஏற்படும். இதனால் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு உபாதைகளுடன் பிறப்பது நேரிடுகிறது. மேலும் தாயின் உடலில் நீர்ச்சத்து குறைந்து அபாய நிலை ஏற்படுவதும் உண்டு.
                
    இதற்கு அலோபதி முறையில் நிறைய மருந்துகள் இருந்தாலும் ஹோமியோபதியில் பக்க விளைவுகள் இல்லாத, கர்ப்ப காலத்தில் உடலின் பிற நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

    காக்குலஸ், டபாகம், செபியா போன்ற மருந்துகள் போக்குவரத்தின் போது ஏற்படும் வாந்திகளுக்கு சிறப்பானது.

    உணவின் வாசனையே பிடிக்காதபோது, உணவு மீது வெறுப்பு ஏற்படும்போது காக்குலஸகோல்சிகம், இபிகாக், செபியா ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும்.

    செபியா - உணவை நினைத்தாலே வாந்தி, குமட்டல், வாகனத்தில் செல்லும்போது வாந்தி, உடலுறவு மீது வெறுப்பு, பொதுவாக இன்பம் விளைவிக்கும் அனைத்தின் மீதும் ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றிற்கு செபியா ஒரு அரு மருந்து.


    காக்குலஸ் - பயணம் மற்றும் அசைவுகளால் வாந்தி, வாகனத்தில் செல்லும்போது நகரும் பொருட்களை கண்டால் கிறுகிறுப்பு, குமட்டல் ஆகியவற்றிற்கு இது கொடுக்கப்படுகிறது.

    கிரியோசோட்டம் - குமட்டல் ஆனால் வாந்தி எடுக்க இயலாமை, வாந்தி எடுக்கும்போது அதிக சிரமம் எற்படுதல், இனிப்பான நீர் சுரத்தல், ஜீரணமின்மை, புளிப்பான அமிலத்தன்மையுள்ள, கோழை போன்ற வாந்தி ஆகியவைகளுக்கு கிரியோசோட்டம் அற்புத ஹோமியோ மருந்து.

    இபிகாக் - வாந்தி குமட்டலால் நாக்கு கெட்டுவிடாமல் சுத்தமாக வைத்திருக்க இது கொடுக்கலாம்.

    வெராட்ரம் ஆல்பம் - சிலருக்கு வாந்தியின் போது உடல் குளிர் ஏற்படும், நெற்றி வியர்வையும் ஜில்லென்று இருக்கும் இதற்கு வெராட்ரம் கொடுக்கலாம். மேலும் களைப்பு,வாந்தியுடன் வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கும் இது சிறப்பானது.

    நக்ஸ்வாமிகா - காலையில் உணவு உண்டபின்னும் தொந்தரவுகள் அதிகரித்தல்.

    பாஸ்பரம் - நீரை பார்த்தால் வாந்தி, குளிர்பானத்தை சாப்பிட்ட பிறகு வாந்தி ஏற்படுதல்.

    சிம்போரி கார்பஸ் - கர்ப்ப கால வாந்திக்கு இதுவே பொதுவான ஹோமியோ மருந்து. இது தவிர வாயுத் தொல்லை, குமட்டல், நாக்கில் கசப்பு, மலச்சிக்கலுடன் கூடிய கர்ப்ப கால வாந்தி.

    அமிக்டலஸ் - கர்பகால வாந்திக்கு மற்றொரு பொதுவான மருந்து.

    மேற்சொன்ன மருந்துகளை எந்த ஆற்றல் அளவுடன் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை அறிய உங்கள் ஹோமியோ மருத்துவரை கலந்தாலோசிக்கலாமே.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்- Vomiting of pregnancy Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top