அதிர்ச்சி தகவல்கள்... ...! ஹோட்டல் சாப்பாடு... ...! - தமிழர்களின் சிந்தனை களம் அதிர்ச்சி தகவல்கள்... ...! ஹோட்டல் சாப்பாடு... ...! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, October 17, 2014

    அதிர்ச்சி தகவல்கள்... ...! ஹோட்டல் சாப்பாடு... ...!

    கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...


    ‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே வைத்திருப்பார்கள். பின் ‘லன்ச் அவர்’ முடிந்து, இனி அதன் தேவை இல்லை என்ற பின்தான் அது ஃபிரீஸரில் வைக்கப்படும். அதற்குள்ளாக அது சிதைய ஆரம்பித்திருக்கும். பின் இரவு டின்னருக்கோ அல்லது மறுநாள் லன்ச் அவருக்கோ மீண்டும் அந்த மட்டனே பயன்படுத்தப்படும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் சாப்பிடும் மட்டன், சிக்கன் ஃப்ரெஷ் அசைவம் இல்லை.

    ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பற்றி இப்போது பலரும் அறிந்துள்ளார்கள். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதுதான் பெரும்பாலான ஹோட்டல்களில் நடக்கிறது. வறுத்த மீன், சிக்கன் 65 எல்லாம் அலங்காரமாக பிளேட்டில் வைக்கப்பட்டு உங்கள் டேபிளில் பரிமாறப்படும்போது, அவை சமைக்கப்பட்டது பல முறை சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் என்பது நினைவில் வரட்டும்.
    வீட்டில் அசைவம் சமைக்கும்போது, அதை நன்றாக கழுவுவது வழக்கம். ஆனால் அந்த அக்கறையையும், நுட்பத்தையும் ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது. ஆட்டுக் குடல், மீன், இறால்... இவையெல்லாம் பெயருக்கே கழுவப்படும்.

    வீட்டில் கீரையை மண் நீக்கி அலசி, உருளைக் கிழங்கை கழுவி வேக வைத்து, இஞ்சியை தோல் நீக்கி, கத்திரிக்காயை புழு நீக்கி வெட்டி, காலிஃபிளவரை உப்பு, மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் ஒருமுறை மூழ்க வைத்து எடுத்து என்று... அக்கறையாகச் செய்வோம். இவ்வளவு துல்லியமாக சுத்தம் செய்துகொண்டிருந்தால், 11 மணிக்கு எப்படி டேபிளில் இலை போட முடியும் ஹோட்டல்களில்? எனவே, குழாய் தண்ணீரில் ஒருமுறை அலசுவதே அவர்கள் ‘சுத்தம்’ செய்யும் முறை. குறிப்பாக, தற்போது பூச்சிக்கொல்லிகளின் பலனால், பச்சைக் காய்கறிகள் 60% கெமிக்கல் கலந்தே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை கழுவிய பின் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, ஹோட்டல் காய்கறி சமையலின் ஆரோக்கியத்தை சொல்லத் தேவையில்லை.
    வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள். என்றாவது ஒரு நாள் ஹோட்டல்களில் சாப்பிடலாம், தவறில்லை. அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அதிக தீங்கு தராத உணவுகள் இவை. ஹோட்டலில் சாப்பிட்ட நாளில் அஜீரணம், அதிகமான தண்ணீர் தாகம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வாந்தி போன்றவை ஏற்பட்டால், மீண்டும் அந்த ஹோட்டல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்!’’ என்கிறார் எச்சரிக்கையோடு!

    - ம.பிரியதர்ஷினி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அதிர்ச்சி தகவல்கள்... ...! ஹோட்டல் சாப்பாடு... ...! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top