உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள் - தமிழர்களின் சிந்தனை களம் உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, October 20, 2014

  உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள்

  உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள் ..நேர்மையாக விடைகளை கமெண்ட் செய்யவும் .
  உடற்பயிற்சி தொடர்ந்து செய்பவர்களுக்கு இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் வரை குறைகிறது. பெரியவர்கள், ஒரு வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்களும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரத்துக்கும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்பயிற்சிகளில் எந்த அளவுக்கு அக்கறைகொள்கிறீர்கள்? உங்களை நீங்களே அறிந்துகொள்ளும் சுயபரிசோதனை இது.

  1 ஒரு வாரத்துக்கான, உங்கள் வயதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளை செய்கிறீர்களா?
  அ. ஆம், இலக்கை அடைந்துவிடுகிறேன்
  ஆ. கிட்டத்தட்ட அடைந்துவிடுவேன்
  இ. பாதி அளவுக்கு செய்கிறேன்
  ஈ. செய்வது இல்லை
  2 ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் குறைந்தபட்ச அளவிலாவது உடற்பயிற்சிகளை செய்கிறீர்கள்?
  அ. எல்லா நாட்களும்
  ஆ. ஐந்து முதல் ஆறு நாட்கள்
  இ. மூன்று முதல் நான்கு நாட்கள்
  ஈ. இரண்டு நாட்களுக்கும் கீழ்
  3. போதுமான அளவு உடற்பயிற்சி செய்யவில்லை எனில், அதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
  அ. போதுமான நேரம் இல்லை
  ஆ. சோர்வாக உள்ளது
  இ. பயிற்சி கடினமாக உள்ளது
  ஈ. உடற்பயிற்சியில் விருப்பம் இல்லை
  4. மாடிப்படி ஏறி இறங்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
  அ. ஆரோக்கியமாக இருப்பதுபோல்
  ஆ. மூச்சு வாங்குகிறது
  இ. கடினமாக உள்ளது
  ஈ. படி ஏறி இறங்குவதைத் தவிர்த்துவிடுவேன்
  5. இதில் எந்தப் பயிற்சியை உங்களால் எளிதில் செய்ய முடியும்?
  அ. 10 சிட்-அப்ஸ்
  ஆ. ஐந்து பிரஸ் அப்ஸ்
  இ. குனிந்து காலைத் தொடுவது
  ஈ. எதையும் செய்ய முடியாது
  6. ஒரு நாளில் எந்த அளவுக்கு ஆற்றலுடன் உள்ளதாக உணர்கிறீர்கள்?
  அ. நாள் முழுவதும்
  ஆ. போதுமான அளவுக்கு, இருப்பினும் இதை அதிகரிக்க விரும்பவில்லை
  இ. போதுமான அளவுக்கு, சற்று சோர்வை உணர்கிறேன்
  ஈ. நாள் முழுக்க சோர்வு
  விடை
  (அ- 3, ஆ-2, இ-1, ஈ-0)
  15 மதிப்பெண்களுக்கு மேல்...
  உங்கள் பதில்கள் அடிப்படையில் நீங்கள் ஃபிட்டான நபர். தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
  10 முதல் 14 மதிப்பெண்கள்...
  நீங்கள் மனதுவைத்தால் ஃபிட்டான நபராக உங்களால் மாற முடியும். ஏற்கனவே ஆரம்பிக்கவில்லை எனில், வாரத்துக்கு ஐந்து நாட்களுக்காவது, ஒரு நாளைக்கு அரை மணி நேரத்துக்கு உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ஆர்வம் தோன்றும்.
  9- க்கும் கீழ்...
  நீங்கள் ஃபிட்டான நபர் இல்லை. இதே நிலை நீடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை உங்களைத் தாக்கலாம். மருத்துவரை ஆலோசித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா என தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஆலோசனைப்படி உடனடியாக உடற்பயிற்சிகளை செய்யுங்கள். எளிய நடைப் பயிற்சி செய்தால்கூட போதுமானது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top