வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும் - தமிழர்களின் சிந்தனை களம் வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, October 6, 2014

  வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

  வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
  வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, வைட்டமின் K, ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்.
  தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே தினமும் இவற்றை உட்கொள்ள வேண்டும். B, காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும் வைட்டமின் Cயும் நீ¡¢ல் கரையும் வைட்டமின்கள்.

  வைட்டமின் A:

  இது எல்லா செயல்களும் உருவாகவும் வளரவும் அத்தியாவசியமானது. பல் அமைப்பு ஒழுங்காக இருப்பதற்கும் இது தேவை.
  வைட்டமின் A குறைந்தால் இந்தப் பகுதிகளில் உள்ள புறத்தோல் திசுக்கள் சிதைவடைந்துவிடும். ஆண்களிடத்தில் ஆண்மை சக்தியை இயல்பாக வைத்திருப்பதும் வைட்டமின் A தான். மங்கலமான ஒளியில் சகஜமாகப் பார்க்கவும் வைட்டமின் A உதவுகிறது.

  வைட்டமின் A குறைந்தால்

  வைட்டமின் A உள்ள பொருட்களை போதிய அளவு உட்கொள்ளாத போது உடலில் வைட்டமின் A குறைகிறது. சில விதமான நோய்கள் தாக்கும் போதும் இது குறைகிறது. வெளிச்சத்தில் இருந்துவிட்டு இருட்டுக்குச் செல்லும் போது அந்த இருட்டுக்குச் கண் பழகுவது தாமதமாவது வைட்டமின் A குறைபாட்டின் அறிகுறி வைட்டமின். வைட்டமின்A குறைவதால் மங்கிய ஒளியில் பார்வை பாதிக்கப்படுகிறது. இதுதான் மாலைக்கண் நோய் என்று சொல்லப்படுகிறது.
  வைட்டமின் A குறைபாடு அதிகா¢த்தால் செராப்தால்மியா (XEROPHTHALMIA) என்ற நிலை உருவாகிறது. கண்களின் பார்க்கும்திறன் குறைகிறது. அதன் சுருங்கி வி¡¢யும் தன்மை மறைகிறது. கண் சாம்பல் நிறமாகும். இந்த நிலை தொடர்ந்தால் கண் நோய்வாய்ப்படும். இது சீ¡¢யஸான நிலை இதன் விளைவாக பார்வையே பறிபோகவும் கூடும்.
  வைட்டமின் A குறைபாட்டினால் புறத்தோல் திசுக்கள் பாதிக்ப்படுவதால் தோல் கரடு முரடாக மாறுகிறது.
  வைட்டமின் A-வை அளவுக்கதிகமாக உட்கொண்டாலும் அது உடலை பாதிக்கிறது. எப்போதும் தூக்கச் கலக்கம், தலைவலி, வாந்தி அ¡¢ப்பு, சரும வியாதிகள், பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகள்.

  வைட்டமின் A-எப்படிக் கிடைக்கிறது?

  ரெடினால் Retinal, கரோடெனாய்ட் Carotenoids ஆகிய இரண்டு விதங்களில் வைட்டமின் A செயல்படுகிறது. சுறாமீன் எண்ணெய், வெள்ளாடு, செம்மறியாடு, பசு ஆகிய விலங்குகளின் கல்லீரல், வெண்ணெய், நெய், முட்டையிலும் எல்லா விதமான பால் பவுடர்களிலும் வைட்டமின் A உள்ளது.
  காய்கறிகளிலும் கீரைகளிலும் கரோடெனாய்ட் உள்ளது. கேரட், பூசனிக்காய், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றிலும் இது இருக்கிறது. காய்கறி எண்ணெய்கள் பதப்படுத்தப்பட்ட வடிவில் கிடைக்கின்றன (வனஸ்பதி), அவற்றில் அரசு விதித்துள்ள அளவுகளின் படி குறிப்பிட்ட அளவு ரெடினால் இருக்க வேண்டும்.

  வைட்டமின் D குறைந்தால்

  இது செயல்படாத வடிவில் உள்ளது. கல்லீரலில் அதிகம் உள்ளது. தோல், நுரையீரல், மண்ணீரல், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றில் மிகக்குறைவான அளவில் வைட்டமின் D இருக்கிறது. வைட்டமின் D கால்ஷியம், பாஸ்·பரஸ் ஆகியவற்றை சிறுகுடலிலிருந்து கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் கால்ஷியமும் பாஸ்·பரசும் இருக்கும்படி இது பார்த்துக் கொள்கிறது. எலும்பில் கால்ஷியமும் பாஸ்பேட் இருப்பதற்கும் இது உதவுகிறது.
  வைட்டமின் D குறைந்தால்... சிறுகுடலிலிருந்து கால்ஷியமும். பாஸ்பரசும் உடலுக்கு வருவது குறையும். சிறுநீர், மலம் ஆகியவை மூலம் வெளியேறிவிடும். வைட்டமின் குறைவால் குழந்தைகளிடம் ¡¢க்கெட்ஸ் நோயும் பொ¢யவர்களிடம் ஆஸ்டியோ மலோ¢யா ஏற்படும்.
  ¡¢க்கெட்ஸ்:

  வைட்டமின் D கொஞ்சம் குறைந்தால் ஒருவிதமான அவஸ்த்தையும், எ¡¢ச்சலும் ஏற்படும். இந்த நோய் குழந்தைப் பருவத்தில் வரக்கூடியது. வைட்டமின் D குறைவால் எலும்பு வலுவாக்குவதற்குத் தேவையான கால்ஷியமும், பாஸ்பரசும் கிடைக்காது. விளைவாக கால் எலும்புகள் வளைந்து உருமாறிவிடும். விலா எலும்புகள் துருத்த ஆரம்பிக்கும் அடிவயிறு சுருங்கிவிடும். இடுப்பு ஒட்டிபோய் விலா எலும்புகள் புடைத்துக் கொண்டு நிற்கும். மார்பு ஒடுங்கிப் போய் புறாவின் உடலைப் போல ஆகிவிடும். நோய் முற்றிய நிலையில் வயிற்றுக்கோளாறு, கால்களில் பலவீனம் ஆகியவை ஏற்படும். இந்த நோய் குழந்தைகளைத் தாக்கும். குறிப்பாக ஏழைக் குழந்தைகளை. பத்துமாதத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

  ஆஸ்டியோ மலோ¢யா:

  இது பொ¢யவர்களைத் தாக்கும் நோய். கால்ஷியமும் வைட்டமின் Dயும் உள்ள உணவை சா¢யாக சாப்பிடாத பெண்கள் சுலபமாக இதற்கு ஆளாகிறார்கள். கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகா¢ப்பதும் கூடவே வைட்டமின் D உட்கொள்வது குறைவதும் தான் இதற்கு முக்கியக் காரணம். பர்தா அணியும் பெண்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்புண்டு. பலமுறை கருத்தா¢ப்பதால் உடலில் கால்ஷியமும் இரும்பு குறைந்து அதன் விளைவாகவும் இந் நோய் வருகிறது. இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு வலி, எலும்பு பலவீனம், எலும்பு முறிவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

  வைட்டமின் D எங்கிருந்து கிடைக்கும்?

  மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பால் வெண்ணெய், நெய் ஆகியவற்றில் கணிசமாக அளவு வைட்டமின் D உள்ளது. சூ¡¢ய வெளிச்சத்தின்               மூலமாகவும் வைட்டமின் D கிடைக்கும்.

  வைட்டமின் E

  செல்களின் ஸ்திரத்தன்மையையும், வலிமையையும் பாதுகாக்க வைட்டமின் E பொ¢தும் துணைபு¡¢கிறது. குறைமாதக் குழந்தைகளைப் பிழைக்க வைப்பதற்கும் இது உதவி செய்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் தொ¢ய வந்துள்ளது. கை குழந்தைப் பருவத்தில் மூளை வளர்ச்சிக்கு கொழுப்பு அமிலங்கள் பயன்படுவதாகவும் ஆய்வுகள் தொ¢விக்கின்றன. வைட்டமின் E, குறைந்துள்ள குறைமாதக் குழந்தைகளிடத்தில் கொழுப்புச்சத்தை கிரகித்துக் கொள்ளும்திறன் குறைகிறது. கர்ப்பமான தாயிடம் வைட்டமின் E குறைந்தால் பிறக்கும் குழந்தைக்கு இது குறைவாக இருக்கும். பொ¢யவர்களிடத்தில் வைட்டமின் E குறைந்தால் கொழுப்புசக்தியும் குறையும்.

  வைட்டமின் E எங்கிருந்து கிடைக்கும்?

  உணவு தானியங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் நிறைய இருக்கிறது. தேங்காய் எண்ணெய் நீங்கலான எண்ணெய் வகைகள், கொட்டைகள் வகைகள் ஆகியவற்றிலும் இது கணிசமாக இருக்கிறது.

  வைட்டமின் K

  புரோத்ரோம்பின் (PROTHROMBIN) என்ற பொருள் உருவாவதற்கு இது அத்தியாவசியம். அடிப்படும் போது ரத்தம் அதிகமாக வெளியேறுவதைத் தடுப்பதற்காக ரத்தத்தை உறைய வைக்கும் திறனைப் பாதுகாக்க புரோத்தோம்பின் உதவுகிறது.
  குறைந்தால்
  தோல் மற்றும்... வாயிலாக ரத்தக்கசிவு ஏற்படுவது தான் வைட்டமின் K குறைந்திருப்பதன் அடையாளம். இது குறைவதால் கொழுப்பு சத்து சேர்வது பாதிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் இதனால் ஏற்படும். குழந்தைகளிடத்தில் குறிப்பாக குறைமாதக் குழந்தைகளிடத்தில் வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையும் தன்மையை அது பாதிக்கும். கர்ப்பமாக இருக்கும் போது தாய் வைட்டமின் K சா¢யாக உட்கொள்ளாவிட்டால் குழந்தைக்கும் இக்குறை இருக்கும்.

  எங்கிருந்து கிடைக்கும்?

  தாவர எண்ணெய்கள். அ¡¢சி எண்ணெய், கோதுமை,எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்தி எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் இது தாராளமாகக் கிடைக்கிறது. தானியங்கள், இறைச்சி ஆகியவற்றிலும் அதிகம் உண்டு காய்கறிகளிலும், பழங்களிலும் அவ்வளவாக இல்லை.

  வைட்டமின் C

  செல்களுக்கு மத்தியில் உள்ள கோலஜன் உருவாக அஸ்கோர்பிக் (ASCORBIC) அமிலம் இன்றியமையாதது. கோலஜன் பாதிக்கப்பட்டால் ரத்தக்குழாய்கள், பற்கள், எலும்புகள் ஆகியவை ஒழுங்காக அமையாது. இந்த கோலஜன் உருவாக வைட்டமின் C உதவுகிறது. கொலஸ்டராவை சமாளிக்கவும் வைட்டமின் C மிகவும் அவசியம். காயங்களை விரைவில் ஆற்றவும் இது துணைபு¡¢கிறது.

  குறைந்தால்

  நீண்ட காலத்திற்கு வைட்டமின் C குறைபாடு இருந்தால் ஸ்கர்வி என்ற நோய் உண்டாகும். ஓரளவு குறைபாடு இருந்தால் பலவீனம், எ¡¢ச்சல், அடிக்கடி கிருமிகளால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்படுவது முதலியவை ஏற்படும். எலும்புகளில் வலி உண்டாகும்.
  ஸ்கர்வி கைக்குழந்தைகளையும் தாக்கும். இதனால் கை, கால்கள் செயலிழந்து போகும். ஈறுவீக்கம் பற்கள் கொட்டிப்போவது, பலவீனமான எலும்புகள், ரத்தசோகை ஆகியவையும் வைட்டமின் C குறைப்பாட்டின் அடையாளங்கள். தோல் கரடுமுரடாகி உலர்ந்துவிடும். பொ¢யவர்களுக்கு வைட்டமின் C குறைவால் பலவீனம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மூட்டுகளில் வீக்கம் முதலிய அடையாளங்கள் உண்டாகும்.

  எங்கிருந்து கிடைக்கும்?

  எலுமிச்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், கனிந்த மாம்பழம், பப்பாளி ஆகிய பழங்களிலும், நெல்லிக்காயிலும், கொய்யாப்பழத்திலும் இது அதிகம் உண்டு. முட்டைகோஸ் போன்ற காய்கறிகளிலும் வைட்டமின் C உள்ளது. ஆனால் சமைக்கும் போது இதிலுள்ள வைட்டமின் அழிந்துவிடுகிறது. சமைக்காத பொருட்களில் இருக்கும் வைட்டமின் C யில் பாதி சமைக்கும் போது அழிந்து விடுகிறது.

  கனிமங்கள்

  வளர்ந்த மனிதர்களுடைய உடல் எடையில் 4 சதவீதம் கனிமங்கள்தான் இருக்கின்றன. இவை திசுக்கள், எலும்புக்கூடு, உடலில் உள்ள திரவங்கள் ஆகியவற்றில் இருப்பதால் சுகாதாரத்தைப் பேணுவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள் ஆகியவற்றிலும் கனிமங்கள் உள்ளன. இவை இல்லாமல் இருதயம், நரம்பு, திசுக்கள் முதலிய முக்கிய பாகங்கள் இயல்பாக செயல்படமுடியாது. நமது உடலில் கால்ஷியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாஷியம் குளோ¡¢ன், இரும்பு, மக்னீஷியம், தாமிரம், அயோடின், கோபால்ட், துத்தநாகம், அலுமினியம், செலினியம், சிலிக்கான் ஆகிய கனிமங்கள் உள்ளன. வளர்ச்சிக் கட்டத்திலும், கர்ப்பமாக இருக்கும்போதும், முதுமைப் பருவத்திலும் உடலின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதுகாக்க கனிமங்கள் தேவைப்படுகின்றன.

  கால்ஷியம்

  உடலில் இருக்கும் கனிமங்களில் முக்கியமானது இது. எலும்புகளுக்கு வலுவூட்டுவது தான் இதன் முக்கியப்பணி. பல் அமைப்பு சா¢யாக இருப்பதற்கும் கால்ஷியம் அத்தியாவசியமானது இதயமும் தசைகளும் சுருங்கி வி¡¢வதற்கும் இது உதவுகிறது. நரம்புகள் இயல்பாக செயல்படவும் கால்ஷியம் தேவைப்படுகிறது.
  குறைந்தால்
  பாஸ்பரஸ், வைட்டமின் D குறைவது இதன் அடையாளங்கள். வயது ஏற ஏற கால்ஷியம் சக்தியை கிரகித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் திறன் குறையும். பெண்களிடத்தில் மாதவிலக்கு நிற்கும் சமயத்திலும் சினைப்பைகளை அறுவைசெய்து அகற்றி விடும் போதும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும். இதன் விளைவாக ஆஸ்டடோபெரோசிஸ் எனும் எலும்பு சிதைவு நோய் உண்டாகும். இதனால் முதுகுவலி எடை இழப்பு, காரணமற்ற எலும்பு முறிவு, பல் விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை அனைத்தும் கால்ஷியம் குறைபாட்டால் ஏற்படுபவை கால்ஷியம் குறைவால் அதீதமான நரம்புப் பதற்றம் ஏற்படும். மனச்சோர்வு, எ¡¢ச்சல், முடிக்கொட்டுதல், தோல் தடித்துப் போதல், வலிப்பு நோய் ஆகியவை ஏற்படும்.

  எங்கிருந்து கிடைக்கிறது...

  பால் மற்றும் பால் பொருள்களில் ஏராளமாக கால்ஷியம் இருக்கிறது. மலிவான விலையில் கால்ஷியம் வேண்டுமென்றால் கேழ்வரகை நாடலாம். (இது தான் ஏழைகளின் பால்) பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பயறு வகைகள், சிறிய மீன்கள், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றிலிருந்தும் கால்ஷியம் கிடைக்கும்.

  இரும்பு

  சிக்கலான புரத ஹீமோகுளோபினின் ஒரு பகுதி தான் இரும்பு. இந்த ஹீமோபுரோட்டின் ரத்தத்தின் சிவப்பணுக்களின் முக்கியப்பகுதி. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியில் இரும்பு- உதவுகிறது. இது குறைந்தால் ஆக்ஸிஜனைத் தாங்கிச் செல்லும் திறனும் குறைகிறது.
  குறைந்தால்...
  இரும்புச்சத்து குறைந்தால் ரத்த சோகை நோய் உண்டாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மி.லி. ரத்தத்தின் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் குறைந்தால் ரத்தத்தின் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் குறைந்துவிடும். பலவீனம், தலைவலி, களைப்பு ஆகியவை இதன் அடையாளங்கள். நகங்கள் ஸ்பூன் வடிவத்தில் மாறி விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு இரும்புச்சத்து மிகவும் தேவைப்படும், ரத்தசோகை, நோயைப்போக்க அயன் சல்பேட் மாத்திரைகளையும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவையும் உட்கொள்ள வேண்டும்.
  எங்கிருந்து கிடைக்கிறது....
  குடல், சிறுநீரகம், இதயம், இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, ஆகியவற்றில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. உலர்ந்த பீன்ஸ், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், கோஸ் போன்ற காய்கறிகள், பருப்புவகைகள் ஆகியவற்றிலும் இது உள்ளது. பாலில் மிகவும் குறைவாகவே உள்ளது.

  அயோடின்

  தைராக்ஸின் என்ற சுரப்பின் உற்பத்தியில் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது.. தைராக்ஸின், தைராய்டு சுரப்பியினால் உருவாக்கப்படும் ஒரு சுரப்பி, கார்போஹைட்ரேட் செயல்பாட்டில் தைராக்ஸின் முக்கியப்பங்கு வகிக்கிறது.
  குறைந்தால்...
  அயோடின் உட்கொள்வது குறைந்தால் தைராய்டு சுரப்பி வீங்கிவிடும். வளர்ச்சிப் பருவத்தில் இதன் குறைபாடு கடுமையாக இருந்தால் உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க அயோடின் சேர்க்கப்பட்ட உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

  எங்கிருந்து கிடைக்கிறது...

  எல்லா உணவுகளிலும் சிறிதளவு அயோடின் உள்ளது. உணவில் உள்ள அயோடின் அளவு மண்ணில் இருக்கும் அயோடினின் அளவைப் பொறுத்தது. கடலிலிருந்து கிடைக்கும் உணவுகள், உப்பு காய்கறிகள் ஆகியவற்றில் நிறைய அயோடின் உள்ளது. காய்கறிகள் உள்ள அயோடினின் பெரும்பகுதி அவற்றின் இலைகளிலும், பூச்சிகளிலும் உள்ளது.
  எல்லாவிதமான சத்துக்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் தொ¢ந்து கொண்டால் நமக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்படி உணவை சா¢யான விதத்தில் திட்டமிட்டு உண்ணலாம்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top