காளான் சாப்பிடலாமா? சாலை ஓரக் கடைகளில்.. - தமிழர்களின் சிந்தனை களம் காளான் சாப்பிடலாமா? சாலை ஓரக் கடைகளில்.. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, October 6, 2014

    காளான் சாப்பிடலாமா? சாலை ஓரக் கடைகளில்..

    காளான் சாப்பிடலாமா? சாலை ஓரக் கடைகளில்..


    “இன்று பானிபூரி கடைகளிலும், திடீரென காளான் உணவுகள் களைகட்டுகின்றன. அங்கு பயன்படுத்தப்படும் காளான்கள் உண்பதற்கு ஏற்றவையா? காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்ன? இதுபற்றி விரிவான பதில் தேவை.”

    தில்ஷத் பேகம்,ஊட்டச்சத்து நிபுணர், சென்னை.
    “சாலை ஓரக் கடைகளில் விற்கப்படும், எந்த உணவும் சுகாதாரமானது என்று உறுதியளிக்க முடியாது. காளான்கள் சத்துமிகுந்ததாக இருப்பினும், சாலையோரக் கடைகளில் உண்பதைத் தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனெனில், சாலை ஓரக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும், தரமற்ற காளான்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

    தரமான காளான்களை வீட்டில் வாங்கி சமைப்பது நல்லது. எப்படி வேண்டு மானாலும் சமைத்து சாப்பிடலாம். காளான்களில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, பி சத்துக்கள் மற்றும் செலினியம் எனும் தாதுப் பொருளும் இதில் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் (Anti-carcinogenic), கேன்சர் வராமல் தடுக்கும் காரணி. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு.

    காளான்கள் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். இவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னை, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகூட ஏற்படலாம். சில வகை காளான்கள் (Inocybe species) உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புள்ளது. தரமான காளான்கள் வாங்கினால், அவை நிச்சயம் ஆரோக்கியத்தைக் கூட்டும்.”
    - டாக்டர் விகடன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: காளான் சாப்பிடலாமா? சாலை ஓரக் கடைகளில்.. Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top