சாதாரண குடல் இயக்கம் அல்லது வெளிப்படும் மலத்தின் அளவு மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். குடல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறையும்போது மலம் வெளியேறுவது பிரச்சினையாகிறது. அல்லது மலம் வெளியேறுவது குறைவு இருப்பதாக உணரப்படுவதால் அது மலச்சிக்கலாகிறது.
முதிய வயதினரிடையே மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்னையாகிறது. இளம் வயதினரைவிட முதிய வயதினருக்கு 5 மடங்கு அதிமாக மலச்சிக்கல் காணப்படுகிறது. முதியவர்களின் குடல் இயக்கத்தின் செயல்பாடுகள் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது.
மலச்சிக்கல் முடிவுகள் பல காரணிகளை கொண்டுள்ளன. இரையக கீழ் குடல் பாதைப் பகுதியில் ஏற்படும் வழக்கத்துக்கு முறை தவறும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு முன்பே கண்டுபிடித்தால் அழுத்தம் காரணமாக ஏற்படும் பெருங்குடல் கேன்சர் தவிர்க்கப்படலாம்.
எதிர்பாரத விதமாக, பொதுவாகக் காணப்படும் பெருங்குடல் இயங்கு தன்மையின் குறைபாடு அல்லது எரிச்சல் உண்டாக்கும் குடல் இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலான மலச்சிக்கல் பிரச்னை உள்ள நோயாளிகள் ஒன்றும் பாதிப்பில்லாத வகையில் காரணிகளை விளக்குகின்றனர். அதிக அளவு மலமிளக்கி மருந்துகளை சார்ந்திருத்தல், நீர்ஆகார உணவு முறை, போதுமான நார்சத்து பற்றாக்குறை, உடற்பயிற்சியின்மை, மருந்துகளின் எதிர்விளைவுகள் ஆகிய இதர முக்கிய காரணிகளும் மலச்சிக்கலுக்கு காரணம்.
அமில எதிர்ப்பு மருந்துகள், மன அழுத்தத்தை போக்கும் மருந்துகள், ஹிசுட்டமின் சுரப்பி மருந்துகள், சிறுநீர் நீக்க ஊக்க மருந்துகள், பார்க்கின்சன் நோய்க்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள், இரும்பு சத்துமாத்திரைகள், தசை ஓய்வுக்கான மருந்துகள், தூக்கமருந்து ஆகியவை சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
குறைவான காய்கறி உணவுகள், பழங்கள் மற்றும் ஒட்டுமொத்த தானியங்கள் மற்றும் அதிக முட்டை, இறட்சி, பால் அல்லது பால் பொருட்கள் உள்ளிட்ட வற்றில் இருந்து விலகி இருத்தல் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணிகளாகும். தேவையான உணவு உட்கொள்ளாதது, மெல்லிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த்ல் ஆகிய கூடுதல் காரணங்களால் கடுமையான மலச்சிக்கல் ஏற்படும்.
விபத்து காரணமாக அல்லது நடமாட்டம் இன்மை காரணமாக அல்லது நீண்ட நாட்கள் படுக்கையில் இருத்தல் அல்லது குடல் இயக்கம் காரணமாகவோ மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். மிகவும் பிரச்னைக்குரிய விஷயமாகக் கருதி சமீபகால அறிகுறிகளுக்கான சிகிச்சை என்பது நீங்கள் உங்கள் டாக்டரை ஆலோசிக்க வேண்டும். கீழ்க்கண்ட முறைகள் உங்களுக்கு உதவக்கூடும்.
- அதிகக் காய்கறிகள், பழங்கள் உண்ண வேண்டும். முழு தானியங்களை உட்கொள்ளுதல், அதிகக் கொழுப்பு சத்துள்ள உணவுகள், இனிப்புகளை, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- கிட்னி அல்லது இதயக் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் பல வகைகளைக் கொண்ட திரவ உணவுகளை(6 முதல் 8 டம்ளர் திரவ உணவு) அருந்தலாம். ஆனால் அதிக அளவு பால் அருந்துவது மலச்சிக்கல் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
- உடல் இயக்கச் செயல்பாடுகளை அதிகரிக்கவும்.
- நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் டாய்லெட்டில் அவசியம் ஏற்படாவிட்டால்கூட, சிறிது நேரத்தைச் செலவிட்டு குடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
- அமில எதிர்ப்பு மருந்து மற்றும் மலமிளக்கியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பயன்படுத்தினால் குறைவாகப் பயன்படுத்தவும்
0 comments:
Post a Comment