மலச்சிக்கல் தீர எளிய வழிகள் ! - தமிழர்களின் சிந்தனை களம் மலச்சிக்கல் தீர எளிய வழிகள் ! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, October 10, 2014

    மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !

    மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் . அதே  போல் நான் உடம்பு உள்  சூட்டினால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் இதற்கும் எனக்கு தீர்வு சொல்லுங்களேன். என்னுடைய ரொம்ப நாள் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் . உங்களுக்கு என்றும் கடமை பட்டவனாக இருப்பேன்//

    மேற்கண்ட கேள்விக்கான பதில் :-

    மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !

    1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.

    2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை  சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.

    3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

    4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
    இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

    மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.

    சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :     
    1- கடுக்காய் -       விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
    2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
    3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
    இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

    இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

    இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்.

    நன்றி !
    Dr.அரவின் தீபன்...
    சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு -face book 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மலச்சிக்கல் தீர எளிய வழிகள் ! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top