அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும்.
சில சமயங்களில் மஞ்சள் காமாலை இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்து, நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடன் பழகுபவர்களின், மனதில் நம்மைப் பற்றிய ஒருவித கெட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும்.
இதில் உள்ள பெரிய சலால் என்னவென்றால், மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்களை எளிதில் வெள்ளையாக்குவதென்பது மிகவும் கடினம். ஆனால் ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரித்தால், எளிதில் வெண்மையாக்க முடியும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும். குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
0 comments:
Post a Comment