மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள் - தமிழர்களின் சிந்தனை களம் மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, April 19, 2014

  மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்

  மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்:-

  ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.
  இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.
  இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.
  மருத்துவக் குறிப்புக்கள்.
  கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.
  எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
  கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.
  நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.
  காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.
  உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.
  அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.
  இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top