தினமும் தேவை குரோமியம்! - தமிழர்களின் சிந்தனை களம் தினமும் தேவை குரோமியம்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, April 12, 2014

  தினமும் தேவை குரோமியம்!


  இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999இல் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.


      வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே தான் வந்துள்ளது. இதற்கு உண்மையான காரணம், நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீஃபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவது தானாம். இதில் குரோமியம் உப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்களிலும் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.


      இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம்ஆகிய உணவுகளையும் சாப்பிடலாம்.
      சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
      விருந்தின்பேது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.


      பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

  http://www.friendstamilchat.com/
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தினமும் தேவை குரோமியம்! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top