சில வைரஸ் பற்றிய தகவல்கள் :-
உலக அளவில் எது மோசமான வைரஸ் ? இந்த கேள்வி எழும் காரணம் பலவித வைரஸ்கள் இருப்பதால் தான். சில குறிப்பிட்ட கால கட்டங்களில் சில வைரஸ்கள் பிரபலம். தகுந்த மருந்துகள் கண்டுபிடித்து தடுத்து விடுகிறார்கள் சிலவற்றை மட்டுமே முழுக்க பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. சில இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில கொசுக்களைப் போல் அடிக்கும் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி மிகுதியாகி இன்னும் விரியத்துடன் தாக்குபவை. முகமூடி போட்டு கொண்டு மனிதனை உண்டு இல்லை என ஒரு கை பார்ப்பவை.
இந்த பட்டியலில் ஒரு ஐந்தை மட்டும் இறுதியில் வரிசைப்படுத்தலாம்.
HIV - ஹெச் ஐ வி (எய்ட்ஸ்)
இதற்காண உலக அளவில் இறப்புகள் அதிகம் தான் வருடத்தில் 1.8 மில்லியன் பேரின் உயிரை பறித்து வருகிறது.
பரவல் : ரத்தத்தின் மூலமாக பரவக்கூடியது. வியர்வை மூலமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுவதில்லை. உயிரணுக்களின் மூலமாக பரவுகிறது.
தடுப்பு மருந்து [Vacsin] : இது வரை இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜ் வரைக்குமான கவனிப்பு [ட்ரீட்மென்ட் ] மட்டுமே மேற்க் கொள்ளப்படுகிறது.
இன்பூளூயன்ஸா [Influenza virus]
வருடத்தின் இறப்புகள் : ஐந்து லட்சம்
பரவல் : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பரவக்கூடியது.
தடுப்பு மருந்து : இன்னும் முழுதாக ஆராயப்படவேண்டி உள்ளது. வருட கால கட்டத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அவ்வளவே.
ரேபிஸ் [Rabies ]
வருடத்தின் இறப்புகள் : 55 ஆயிரம்.
பரவல்: நாய்கடி, வெளவாள் கடி மூலமாக பரவக்கூடியது மற்றும் சில வகைமூலமாக பரவக்கூடியது. இது விலங்கிலிருந்து.
இபோலா [ EBOLA ]
வருடத்தின் இறப்புகள் : 100 க்கு குறைவானது.
பரவல் : விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும். முக்கியமாக இறைச்சி மூலம் பரவுகிறது.
தடுப்பு மருந்து : இல்லை.
ஒரே ஒரு வைரஸ் மட்டுமே உயிரிழப்புகளில் இருந்து முழுக்க முழுக்க தடுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். அது ;
சின்னம்மை [ Smallpox ]
வருட இறப்பு இல்லை. கிடைத்த புள்ளி விவரங்களின் படி தடுக்கப்பட்டது. அல்லது நீக்கப்பட்டது. முன்னர் இதன் வருட இறப்பு 2மில்லியன் ஆக இருந்தது.
பாதிப்பு : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாக பரவும்.
தடுப்பு மருந்து. நிரந்திரமாக தடுக்கப்பட்டது.
தடுப்பு மருந்து. நிரந்திரமாக தடுக்கப்பட்டது.
உலக அளவில் வைரஸ் நோய் குறைக்கப்பட்டது என்று சொன்னால் அது இளம்பிள்ளைவாதம் [போலியோ] உயிரை எடுக்காமல் வாழ்நாள் முழுதும் முடக்கி போடும் எமகாதக வைரஸ்.
0 comments:
Post a Comment