இயற்கை அழகு குறிப்புகள் - தமிழர்களின் சிந்தனை களம் இயற்கை அழகு குறிப்புகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, April 18, 2014

    இயற்கை அழகு குறிப்புகள்


    முகம் பளபளக்க:
    கால் தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள்
    கால் தேக்கரண்டி ஜாதிக்காய் தூள்
    கால் தேக்கரண்டி சர்க்கரை தூள்
    கால் தேக்கரண்டி வெண்ணெய்
    ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். 

    தோல் சுருக்கம் நீங்க: 

    ( பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வரும் வயிறு தோல் சுருக்கத்திற்கு)
    ஒரு தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள்
    அரை தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் தூள்
    கால் தேக்கரண்டி பால்
    அனைத்தும் கலந்து சுருக்கத்தின் மேல் ஒரு மாதம் தடவி வர சுருக்கம் குறையும். 

    ரோஜா நிற உதடுகளுக்கு: 
    இரண்டு சொட்டு ரோஜா எண்ணெயும் தேனும் கலந்து தடவி வர ரோஜா நிறம் பெறும் உதடு. 

    கண் கருவளையத்திற்கு:

    இரண்டு தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள் மற்றும் பால் பவுடர்
    அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு
    இவற்றை கலந்து தினமும் தடவி வர கருவளையம் மறையும். 
    (அல்லது)
    இரண்டு சொட்டு தேனும் இரண்டு சொட்டு ரோஜா எண்ணெயும் கஸ்தூரிமஞ்சள் தூளும் கலந்து தடவலாம். 

    கால் வெடிப்புக்கு:

    ஐந்து சொட்டு ரோஜா எண்ணெய் 
    சில சொட்டு கடுகு எண்ணெய்
    மற்றும் கஸ்தூரிமஞ்சள் தூள் சேர்த்து தடவி வர சரியாகும். 

    இயற்கை ப்ளீச்:

    அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு
    ஐந்து சொட்டு தேன் மற்றும் சிறிது பார்லி தூளுடன் கலந்து முகத்தில் தடவலாம். 

    இயற்கை ஃபேஸ்பேக்:

    எலுமிச்சை இலை,தயிர்,கடலைமாவு, கஸ்தூரிமஞ்சள் கலந்து தடவவும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இயற்கை அழகு குறிப்புகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top