சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! - தமிழர்களின் சிந்தனை களம் சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, April 5, 2014

    சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

    சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!
    1. முடி வளர :
    முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகுசேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
    2. சொட்டைத் தலையில் முடி வளர :
    பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடிவளரும்.
    3. வழுக்கைத் தலையில் முடி வளர :
    கீழாநெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங் காய் எண்ணெயில் போட்டு காய் ச்சி தலைக்கு தடவி வந்தால் வழு க்கை மறையும், முடியும் வளரும்.
    4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர;
    நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தட வலாம்.
    5.முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தங்காய் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
    முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
    தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக் கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளரவாய்ப்பு உண்டு.
    தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெ ய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
    இப்படி செய்தாலும் முடி நல்லா செழித்து வளரும்.
    முடி கொட்டுவதும் நிற்கும்
    கூந்தல் உதிர்வு
    தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
    வாரம் ஒரு முறை இ ப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
    அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
    இளநரை நீங்க
    (a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண் ணெயில் கலந்து தடவி வரலாம்.
    (b)நெல்லி முள்ளியுடன், கரிசலாங்க ண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச்சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.
    கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும்
    கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
    (C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
    பேன் தொல்லை நீங்க
    வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.
    செம்பட்டை மறைய
    முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
    பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
    1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந் தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத் தம் செய்யலாம்.
    இது பொடுகு பெருகுவதை தடுக்கும்.
    புண் இருந்தால் இதை பய ன்படுத்தக்கூடாது.
    2. சாலிசிலிக் அமிலம் சல்ப ர் கலந்த சாம்புகளை பயன் படுத்தலாம். “பிடிரோஸ் போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமி யால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
    3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொ ஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழி த்து குளிக்கனும்
    4. பாலுடன் மிளகு பவுட ரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
    5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
    6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
    7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரொம்ப நல்லது
    8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
    9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த் து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
    10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கல ந்து தலையில் தேய் கலாம்
    11. வசம்பு பவுடரை தேங்காய் எண் யெயில் ஊறவைத்து தேய் க்கலாம்
    12.தலைக்கு குளித்தபின்பு தலையைதுவ ட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரி ல் கலந்து தலைக்கு குளித்து அதன் பின்பு துவட்டி கொள்ள லாம்.
    13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச் சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கல வையை தலையில் தேய்க்கனும்.
    14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேர ம் ஊறவைத்து பின்பு குளிக்கனும்.
    15. மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.
    ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறு ப்பு தலையில் இருக்கும் முடிக்கு உ ள்ளது.
    முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.
    எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப் பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக் குமார்.
    தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷய மே.
    முடி கொட்டும் பிரச்னைக் கு பல காரணங்கள் உள்ளன.
    சத்துக்குறைபாடான உணவு, அ திகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு
    பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்று வதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம்.
    தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும்.
    தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.
    தலையின் தோல் படலத்தில் எண் ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்ப டும் பிசுக்கினாலும் முடி கொட்டும்.
    வியர்வை அதிகமாக சுரத்தல், தை ராய்டு ஹார்மோன் குறைபாடு,
    பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.
    ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம்.
    ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்.
    தலைப்பகுதியில் சொரியா சிஸ் பிரச்சனை இருந்தாலும் முடி கொட்டும்.
    ஷாம்பு மற்றும் எண்ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடிகொட்டும் பிரச்ச னையை தீர்க்க முடியாது.
    முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும்.
    முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும்.
    முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வ ண்ணம் அதிகரிக்கும்.
    எப்போதும் வறட்சியாக காணப்படும்.
    நுனிப்பகுதி வெடிக்கும்.
    இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும்.
    ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
    பாதுகாப்பு முறை:
    ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
    அதே போல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும்.
    முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட
    வாய்ப்புள்ளது.
    எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம்.
    பெண்களைப் பொறுத்த வரை மாத விலக்கு தொடங்கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிறது.
    எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும்.
    வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு குளி க்க வேண்டும். ஷாம்புவை அடி க்கடி மாற்றக்கூடாது.
    மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு
    குளிக்க பயன்படுத்தலாம்.
    முடியை மென்மையாக கையாள வேண்டும்.
    இயற்கையான காற்றில் முடி யை உலர்த்துவது நல்லது.
    முடிஉதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத் துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது.
    பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம்.
    மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்.
    பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் அதையும் சரி செய்யவும்.
    முக்கியமாக டென்ஷனைக் குறை க்க வேண்டும்.
    தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.
    படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?
    1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமி டம் கூந்தலை சீவ வேண்டும்.
    அது வும் சீவும்போது, கூந்தலை பின்புற மாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.
    அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி , அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்து விடும்.
    2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல்
    செய் யவேண்டும்.
    இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
    மேலும் கூந்த லும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளி யல் எடுக்கலாம்.
    இரவில் எண்ணெய் தேய் த்து மறுநாள் எண்ணெய் தலையு டன் வெளியே செல்ல முடியாது.
    ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறு நாள் ஷாம்பு போட்டு குளி த்துவிடலாம்.
    அதனால் கூந்தலானது ஆரோக்கியமா க இருப்பதோடு, நன்கு வளரும்.
    ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும்.
    அப்படி இருந்தால்தான், கூந்தலை வளர்ச்சியடையும்.
    3. கூந்தலானது நன்கு வளர வேண்டு மென்றால், படுக்கும் முன் கூந்தலை ந ன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யா து.
    4. நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்கலாம்.
    அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.
    மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும்.
    ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.
    இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, உடலும் ஆரோக்கியம் அடையும்.
    மேலும் டென்சன், தலை வலி, மன அழுத்தம் போன்றவையு ம் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.
    முடி நன்கு வளர மற்றும் முடி உதிர்வுக்கான
    மருத்துவக் குறிப்புக்கள்
    அதிக அளவு வைட்டமின் பி மற்று ம் புரதச்சத்தை உணவில் சேர்த்து க் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.
    தலைமுடி, கெரட்டீன் என்ற புரதத்தால் ஆனது .
    அதன் வளர்ச்சிக்கு புரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை.
    இல்லாவிட்டால் முடி உதிரும்.
    புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட்,
    கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பி களை சரிசெய்ய முடியும்.
    நெல்லிக் கனி தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர் ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது.
    எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது.
    கற்றாழை கேசப்பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது.
    தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
    தோல் இறுக்கத்தி ற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.
    கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத்
    தேய்த்து வர தலைமுடி நன்கு செழித் து வளரும்.
    எண் ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
    வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகி வர முடி வளரும்.
    அது தலைமுடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
    தலைமுடி நன்கு வளர,
    கொத்து மல்லி, கீரைகள், கறிவேப்பிலை, பால் பொருட்கள்,
    முருங்கைக்காய் முதலியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் தலைமுடி செழித்து வளரும்.
    கறி வேப்பிலையும், தேங்காய் எண் ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன் படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.
    வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் தலைமுடி கொட்டுவது நின்று விடும்.
    கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலை யில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்வது நிற்கும்.
    வெந்தயம், குன்றிமணி பொ டிசெய்து தேங்காய்எண்ணெ யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய் த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும் .
    தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
    தலையில் திட்டுத்திட்டாக தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந் தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர தலை முடி வளரும்.
    சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிராது.
    டயட்
    நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்ட மின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோ ய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மனஅழுத்தம்,
    சுற்றுச் சூழல் மாசு, வ யது முதிர்வு உள்ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை உள்ளது.
    முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகி றது.
    ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம்.
    தைராய்டு ஹார் மோன் குறைபாட்டினாலும் முடி உதிரும்.
    காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறை பாடுகள் இருந்தால் முடி உதிரும் பிரச்னை அதிகரிக்கும்.
    சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள்
    அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும்.
    கேரட், எலுமிச்சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள்
    சேர்க்கவும்.
    அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு சேர்க்கலாம்.
    ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்க வும். சோயா மற்றும் சோயா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
    காளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம்.
    பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைகளையும் சேர்க்கலாம்.
    தினமும் 12 டம்ளர் தண்ணீராவ து குடிக்க வேண்டும்.
    மசா ஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட்கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம்.
    பாட்டி வைத்தியம்
    * முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து
    குளி த்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
    * முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்க ளுக்கு சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.
    * மிளகுத்தூள், வெங்கா யம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.
    * மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தே ங்காய் எண்ணெயில் கா ய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந் தால் முடி கருப்பாக மாறும்.
    * மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உரு ண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண் ணெயில் கரைத்து தலையில் தட வி வந்தால் முடிவள ரும்.
    * பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த் திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடி யை நல்லெண்ணெயில்
    கு ழைத்து த லைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித் தால் பொடுகு தொல்லை தீரும்.
    இன்று பெண்களைப்போல ஆண்களும் தங்கள் தலைமுடி யைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    ஆண்களுக்கும், பெண்களும் உதவும், முடிகாக்கும் குறிப்புகள் இவை…
    * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத் து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொ ண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
    * கடுக்காய், தான்றிக்காய், நெல் லிக்காய் பொடிகளை கல ந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலு மிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளி த்துவர முடி உதிர்வது நிற்கும்.
    * வெந்தயம், குன்றிமணி பொடி செ ய்து தேங்காய் எண்ணெ யில் ஊற வைத்து ஒரு வாரத்துக்குப் பின் தின மும் தேய்த்து வந்தால் முடி உதிர்வ து நிற்கும்.
    * முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வள ர கீழா நெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங்கா ய் எண்ணை யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக் கும்.
    * இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
    * முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத் திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்கா ய் எண்ணையில் காய் ச்சி ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர வேண்டும்.
    * காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணை யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.
    * தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கி ராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண் டும்.
    * செம்பட்டை முடி நிறம் மாற, மரி க்கொழுந்து இலையை யும் நிலா வரை இலையையும் சம அளவு எடு த்து அரைத்துத் தலைக்குத் தடவினா ல் செம்பட்டை முடி நிறம் மாறும்.
    * நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மா லை தொடர்ந்து குடித் து வந்தால் நரை மாறி விடும்.
    * முடி வளர்வதற்கு கறி வேப்பிலை அரைத்து
    தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
    * கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
    * முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை
    உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவி வரவேண்டும்.
    * புழுவெட்டு மறைய, நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும், புழு வெட்டும் மறையும்.
    பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில்
    படுக்கும்போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
    பொறுமைக்கு நன்றி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top