தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !! - தமிழர்களின் சிந்தனை களம் தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, April 12, 2014

  தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!


  சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.

  அதிலும் குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இதற்கு ஒரு சில உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.


  நா ஊற வைக்கும் உணவுகள்

  நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும்.
  ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.


  காரமான உணவுகள்  நிறைய பேர் சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைக்கின்றனர்.
  ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும்.

  ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.


  பால்  தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர்.ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

  வறட்சியான உணவுகள்.

  வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

  காப்ஃபைன்

  சூடான காப்பி குடித்தால் நன்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காப்ஃபைனில் உள்ள பொருள் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும்.ஆகவே காப்ஃபைனால் ஆன பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.


  ஆல்கஹால்  சிலர் தொண்டை புண்ணின் போது ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.            
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top