இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம் இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, April 17, 2014

    இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி?

    மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு. 

    அதிக விலை  கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது.

    இன்வர்ட்டர் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி, கணினி போன்ற முக்கியமான விலை உயர்ந்த சாதனங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இன்வர்ட்டர் சரியான மின்சாரத்தை சீராக கொடுக்கும்பொழுது இதுபோன்ற சாதனங்கள் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவேதான் இன்வர்ட்டர் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது. 

    இன்வர்ட்டர்களை எப்படி பராமரிப்பது? எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விளக்கங்கள் கீழே… 


    Reduce this image




    • Inverter வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தரையில் வைக்க கூடாது. முடிந்தளவு இன்வர்ட்டரை உயரமான செல்ப் மீது வைப்பது நல்லது.  
    • இன்வர்ட்டரை கீழே வைக்கும் நிலை இருந்தால் இன்வர்ட் இருக்கும் இடத்தில் தண்ணீர் போன்ற ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழுந்தைகள் செல்லாத இடமாக இருக்க வேண்டும்.
    • இன்வர்டர் சார்ஜ் (Power Inverter charging)ஆகிக்கொண்டிருக்கும்போது, மின் இணைப்பை துண்டிக்க கூடாது. 
    • சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது பேட்டரியை (Battery Removal) கழற்றுவதும் தவறான செயல். 
    • மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைத்தாலும், மாதத்தில் ஒரு நாளாவது முழுமையாக இன்வர்ட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்வர்ட்டரின் செயல்படும் திறன் (Inverter act) குறையாமல் இருக்கும். 
    • இன்வர்ட்டர் பேட்டரியின் டிஸ்டில்ட் வாட்டர் (Battery distilled Water) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும்போது அதை நிரப்பி வைக்க மறக்க கூடாது. 
    • இன்வர்டர் பேட்டரிகளில் இரு வகை உண்டு. 1. Tubular battery. 2. Flat Battery. இதில் சிறந்ததாக கருதப்படுவது டியூப்ளர் பேட்டரி. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது. 
    • வெப்பமிகுந்த இடங்களிலும் இன்வர்ட்டரை வைப்பது நல்லதல்ல.. உதராணமாக கேஸ் ஸ்டவ் (Gas stove) உள்ள இடம். அதேபோல தீயை பயன்படுத்தும் இடங்கள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் போன்ற தீயால் எரியும் விளக்குகள் ஆகியவற்றை இன்வர்ட்டர் அருகில் வைக்க கூடாது. 
    • இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதனுடைய அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட(Permissible speed) , கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக்கூடாது. சிலர் விரைவாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைத்து வேகத்தை கூட்டுவார்கள். ஆனால் அது இன்வர்டர் விரைவிலேயே பழுதாக காரணமாக அமைந்துவிடும். 
    • அதிக நாள் இன்வர்ட்டரை பயன்படுத்தாத சூழலில், அதை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். தூசி, குப்பைகள் போன்றவைகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது. 
    • இன்வர்டர் இயக்கத்தில் உள்ளபோது தூசிகளிலிருந்து பாதுகாக்க அதன்மீது எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை போட்டுவைக்க கூடாது. 
    • புதிய இன்வர்ட்டரின் (New inverter)  மீது குப்பைகள் விழாமல் இருக்க ஒரு சிலர் துணி அல்லது அட்டைப்பெட்டிகளால் மூடிவைத்துவிடுவார்கள். அதுபோன்ற செயல்கள் ஆபத்தை உருவாக்கிவிடும். 



    மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும். 

    மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t34775-topic#ixzz2z9wYxxDK 
    Under Creative Commons License: Attribution
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top