வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில், மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர். முதன் முறையாக, இவ் வலிகளுக்கு அறுவை சிகிச்சை எதுவுமின்றி, முதுகு மற்றும் கழுத்து மருத்துவமனை ஒன்று கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? முள்ளந்தண்டான 33 அடுக்குகளால் ஆன எலும்புகள், பின் கழுத்தின் அடிப்புறத்திலிருந்து இடுப்புக்கு மேல் வரை இணைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு அசையக்கூடிய நமது உடலினைத் தாங்கிப் பிடித்துள்ளது. ஒவ்வொரு எலும்பும் வட்ட அமைப்பிலான தட்டு எலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. முதுமையினாலோ, கடுமையான உழைப்பினாலோ, தவறான முறையில் உடலை வளைப்பதனாலோ வட்டத் தட்டுகள் தம் இடத்திலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக வலி, மரத்துப் போதல் போன்ற தொல்லைகள் ஏற்படும். இதனால் வட்ட வடிவிலான தட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு, மூட்டுகளில் வலி உண்டாகி அவை நழுவவும் வாய்ப்பு உண்டு.
மூட்டு நழுவுதலை மருந்தினால் குணமாக்க முடியுமா? ஓரளவு பிஸியோதெரப்பி, ஓய்வு மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் வலியைக் குறைக்க முடியும். ஆனால், இது போன்ற சிகிச்சைகளில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். நழுவிய மூட்டுகள் மீண்டும் பழைய இடங்களிலேயே சென்று சேரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. சில நேரங்களில் தட்டுகளில் கீறல் ஏற்பட்டு, கூழ் வெளியேறி, பசைத் தன்மையையும் இழக்க நேரிடும். வயது மூப்பின் அடிப்படையில் அவதிப்படுவோர்க்கு மருந்து, மாத்திரைகளால் குணமாக்க முடியாது.
தீர்வு என்ன? நரம்பின் மேலே அழுத்தக்கூடிய நழுவிய வட்டத்தட்டு எலும்புகளை மநஊஈஅ-வால் அங்கீகரிக்கப்பட்ட ஈதல9000 கருவியைக் கொண்டு சரி செய்ய முடியும். இந்த கருவியினால் மீண்டும் மீண்டும் பயிற்சி பெறும்போது வலிக் குறைந்து, முதுகெலும்பு சரியான நிலைக்கு வரும்.
நழுவிய மூட்டுகளை எத்தனை முறை சரி செய்ய வேண்டும்? வட்டத் தட்டு எலும்பில் உண்டான நோயினைப் பொருத்து 18 தடவைகள், குறைந்தபட்சம் ஒன்றரை மாதங்களுக்குச் செய்ய வேண்டும்.
வலி நிவாரணிகளாக மாத்திரைகள் கொடுக்கப்படுமா? ஊசி மருந்து உண்டா? மருத்துவமனையில் தங்க வேண்டுமா? இவை எதுவும் தேவையில்லை.
ஈதல9000 கருவி நிலையான மருத்துவமா? ஈ என்பது அழுத்தத்தைக் குறைப்பது, த முற்றிலுமாகக் குறைத்தல், ல என்பது பயிற்சி. ஆக, ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிஷம் மேற்சொன்ன கருவியைப் பயன்படுத்தினால், நோயாளிகள் குணமாகிவிடுவர். எதிர்காலத்திலும் எந்தத் தொல்லையும் இராது.
நன்றி -http://www.dinamani.com/health
0 comments:
Post a Comment