சோரியாஸிஸ் ( வீட்டு வைத்தியம் ):-
சோரியாசிஸ் என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது.
சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும்.
பல நேரங்களில் இது பொடுகு, படை, எக்ஸிமா என்று தவறாகக் கூறி மருத்துவம் செய்யப்படுவதுமுண்டு.
சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும்.
தயிரையும் தவிர்க்கவும்.
கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்
வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும்.
குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.
கீழ்க்கண்டவற்றை களிம்பாக செய்து பாதிக்கப்பட்ட மேனியில் தடவலாம் – பாதாம், மல்லிகை.
0 comments:
Post a Comment