மவுஸை லாக் செய்ய, பென்சில் இப்பொழுது பேனாவாக ,இன்னும் நிறைய - தமிழர்களின் சிந்தனை களம் மவுஸை லாக் செய்ய, பென்சில் இப்பொழுது பேனாவாக ,இன்னும் நிறைய - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, April 26, 2014

    மவுஸை லாக் செய்ய, பென்சில் இப்பொழுது பேனாவாக ,இன்னும் நிறைய

    நண்பர்களே குழந்தைகள் இல்லாத வீடு கிடையாது என்பது போல கணினி இல்லாத வீடு
    கிடையாது என்பதும் நிரூபணம் ஆகி வருகிறது. அவ்வாறு குழந்தைகள் இருக்கும்
    வீட்டில் அந்த குழந்தைகள் கணினியின் மவுசை அப்படி இப்படி ஆட்டி
    அனைத்தையும் கிளிக் செய்து ஒரே ரகளை செய்வார்கள் அப்பொழுதுதான் சிறிது
    நேரம் ஒரு பதிவு போடலாம் என்றால் தங்கமணி கூப்பிடுவார்கள். அந்த
    நேரத்தில் நம் குழந்தைகள் மவுசை வைத்து அனைத்தையும் ஒரு கோலம் செய்து
    விடுவார்கள். இது போல அவர்கள் செய்யாமல் இருக்க ஒரு சிறு மென்பொருள்
    மூலம் உங்கள் மவுஸை கிளிக் செய்வதை தடுக்கலாம். இதன் பெயர் Kids Key Lock
    இதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி


    உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மற்றும் கணினியை லாக் செய்ய பாஸ்வேர்ட்
    செய்ய போன்ற வேலைகளை Ctrl + Alt + Del கீகளை அழுத்தி செய்வோம். இந்த
    கீகள் அழுத்தும் போது வரும் கணினி ரீஸ்டார்ட் மற்றும் இது போன்றவைகளை
    மறைக்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது. இதன் மூலம் Ctrl + Alt + Del
    அழுத்தினால் வெறும் டாஸ்க் மேனஜர் அல்லது ரீஸ்டார்ட் அல்லதுஅ கணினி லாக்
    செய்வது போன்றவற்றை மட்டும் கொண்டு வர முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி




    கணினியில் தற்காலிக கோப்புகள் இணையத்தில் பயன்படுத்தும் பொழுது உருவாகும்
    கோப்புகள் நிறைய வேலைகளை செய்வது CCleaner என்பது இது மிகவும் உலகளவில்
    அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகும். 
    webAtom என்ற நிறுவனம் நிறைய அப்ளிகேசன்களின் தற்காலிக கோப்புகளை நீக்கும்
    வண்ணம் சிறு மென்பொருளை அளித்துள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்கிய பிறகு
    அதை திற்ந்து கொள்ளுங்கள் அதில் Download Latest Updates என்பதனை கிளிக்
    செய்தால் புதிய அப்ளிகேசன்கள் வசதி மேம்படுத்த்ப்படும். மென்பொருள்
    தரவிறக்க சுட்டி
    நேரடியாக மென்பொருளை தரவிறக்க சுட்டி



    கூகிள் குரோமில் எந்த ஒரு ஹிஸ்டரியும் சேமிக்காமல் வலைத்தளத்தை
    பார்வையிட இன்கோகினோடோ மோடு என்று உள்ளது. சாதரண வலைத்தளங்கள்
    பார்வையிடும் பொழுது நம் விரும்பும் தளம் மட்டும் தானாகா இன்கோகினோடோ மோடு
    செல்ல இந்த கூகிள் குரொம் எக்ஸ்டென்சன் உபயோகப்படும். சுட்டி இந்த எக்ஸ்டென்சன் பெயர் ஆட்டோநிடோ என்று பெயர்.



    குறிப்பிட்ட அப்ளிகேசன்கள் மட்டும் இயங்கமால தடுக்க வேண்டுமா நாம்
    விரும்பும் பொழுது மட்டும் அதை இயக்க வேண்டுமா. இந்த மென்பொருளை
    உபயோகப்படுத்தி நீங்கள் இயங்கமால தடுக்க வேண்டிய மென்பொருளின் .EXE கோப்பை
    இந்த மென்பொருள் வழியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ( உ.ம்.
    utorrent.exe) பிறகு அதை Block பட்டனை அழுத்துங்கள். வேண்டாம் என்றால்
    அந்த அப்ளிகேசனை UnBlock செய்துகொள்ளுங்கள். UnBlock செய்வதற்கு
    பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். சுட்டி





    கூகிள் குரோமில் திற்ந்து வைத்துள்ள ஒரு தளம் தானாக புதுப்பித்துக் கொள்ள
    (Refresh) செய்ய ஒரு சிறு எக்ஸ்டென்சன் மூலம் முடியும். இந்த
    எக்ஸ்டென்சன் நிறுவிய பிறகு அதில் உங்களுக்கு 5 செகண்டுகுகள் முப்பது
    நிமிடங்கள் வரை தானாக ரெப்ரெஷ் செய்து கொள்ளுமாறு அமைத்துக் கொள்ள
    முடியும். எக்ஸ்டென்சனை நிறுவ சுட்டி




    இதையே பயர்பாக்ஸ் உலாவியில் செய்ய இந்த ஆடு ஆனை உபயோகப்படுத்தவும் சுட்டி









    லிக்விட் பென்சில் வரபோகிறது. அதாவது இதுவரை மரத்தில்
    செய்யப்பட்ட அதனுல் கிராபைட் வைத்த்து செய்யப்பட்ட பென்சில் உபயோகித்த
    நாம் இனி பால்பாய்ன்ட் பேனா போல உள்ள கிராபைட் லிக்விட் பென்சில் வர
    போகிறது. இந்த பேனாக்கள் செப்டம்பர் 2010ல் இருந்து கடைகளில் கிடைக்கும்
    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்பி என்ற நிறுவனம் இதை தயாரித்து
    வெளியிடுகிறது. இது இந்தியாவில் எப்பொழுது என்று தெரியவில்லை. 
    இருந்தாலும் விரைவில் இந்தியாவில் கிடைக்கும். இது குறித்த மேலதிக
    செய்திகளுக்கு சுட்டி இந்த பென்சில் விரைவில் அனைத்து பள்ளிக் குழந்தைகளின் பொருட்கள் வாங்கும் லிஸ்டில் சேரும் என்பதில் ஐயமில்லை.







    மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t7104-topic#ixzz2zxE9F1PQ 
    Under Creative Commons License: Attribution

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மவுஸை லாக் செய்ய, பென்சில் இப்பொழுது பேனாவாக ,இன்னும் நிறைய Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top