பிரசவ அறையில் பெண்ணிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது? - தமிழர்களின் சிந்தனை களம் பிரசவ அறையில் பெண்ணிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, April 28, 2014

  பிரசவ அறையில் பெண்ணிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது?

  பிரசவம், கர்ப்ப காலத்தின் இனிமையான பகுதி அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிரசவத்தின் ஒட்டு மொத்த வழிமுறையும் பெரும்பாலான பெண்களை சோர்வுற செய்து கவலை கொள்ள செய்வதாகும். வலியை குறைக்கும் வழிகளாக சொல்லபடுகிற மருந்துகள், அக்குபிரஷர் பின் பக்க மசாஜ், முதுகு தண்டுவடத்தில் ஊசி போடுதல் ஆகியன பிரசவத்தை எதிர் நோக்கியுள்ள தாய்க்கு உண்மையான வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றே கூற வேண்டும்.


  பெரும்பாலான நேரங்களில், வாழ்க்கை துணை அல்லது பராமரிப்பாளர் பிரசவ நேரத்தில் அந்த பெண்ணுக்கு தேவையான ஆறுதல் வழங்க கூடிய வார்த்தைகளாக எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்ற குழப்பத்தை சந்திக்கின்றனர். இங்கே பிரசவ வேதனையில் உள்ள ஒரு பெண் கேட்பதற்கு வெறுக்கும் உபயோகமற்ற ஐந்து விஷயங்களை பட்டியலிட்டுள்ளோம்.

  நீங்கள் இன்னும் விபரங்களை விவரிக்கவில்லை

  நீங்கள் தற்போது தான் மருத்துவரிடமிருந்து விபரங்களை தெரிந்து கொண்டீர்கள் எனில், அந்த தகவலை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். நார்மல் டெலிவெரியாக இருக்கும் பட்சத்தில் அது 4 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திலும் நடக்கும் என்பதை கர்ப்பிணி பெண் நன்கு அறிவார். அவரது கருப்பை வாய் அவரின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் சவாலாக அமைந்து செயல்முறையை தாமதப்படுத்துகிறது என்ற விபரத்தை அவரிடம் தெரிவிப்பதென்பது அவரின் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

  மேலும் பிரசவ அறையில் உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம் சிறந்த துணை அல்ல. வழங்க வேண்டிய உதவி பிரசவ வலி என்பது எந்த நிலையிலும் அதீதமான வேதனையை அளிக்க வல்லது. நீங்கள் அவருக்கு ஏதேனும் உதவ விரும்பினால் அவரிடமிர்ந்து வெளிப்படும் அறிகுறிகளை உற்றுநோக்குங்கள் அது கர்ப்பிணிக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை உங்களுக்கு தெரிவிக்கும். அவருக்கு வியர்ப்பதை நீங்கள் கண்டீர்கள் எனில் ஏசியை ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள்.

  குளிர்ந்த நீரில் நனைத்த துண்டினை கொண்டு அவரது முகத்தில் ஒற்றி எடுங்கள். அவரது வலியை குறைக்கும் மசாஜ் செய்யுங்கள். அடிப்படை கர்ப்ப கால வகுப்புகளில் சில விஷயங்களை கற்றிருந்து நீங்கள் அதனை முயன்று பார்க்கும் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் கர்ப்பிணியின் நெற்றியையோ அல்லது தோள்களையோ இதமாக தடவி கொடுக்கலாம். அவருக்கு ஆர்வமிருந்தால் அவரிடம் ஏதேனும் பேச்சு கொடுத்தபடி இருங்கள். ஆனால் அனாவசியமாக பேசி கொண்டிருப்பது சிறந்த யோசனை அல்ல.

  ஆற்றலை சேமித்து வையுங்கள்

  பிரசவ வலியிலிருக்கும் பெண்ணிடமிருந்து கூச்சல், அழுகை, சண்டித்தனம் என்று அனைத்தையும் எதிர்பார்க்கலாம். இவை அனைத்தையும் சமாளிக்கும் தகுதியில்லாத நபர் அந்த பெண்ணின் பிரசவ கால துணை பொறுப்பிலிருந்து விலகுவதே சிறந்தது. பிரசவ வேதனையில் இருக்கும் பெண் பிரசவத்தின் எந்த கட்டத்தில் தான் உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும் அவரை பரிகசிப்பது தாங்க முடியாத வலியுடன் மிகுந்த வேதனையை தரும்.

  இது கர்ப்பிணி பெண் தான் நன்கு அறிந்த நபர்கள் மத்தியில் கூட வேதனையை தந்து, வெளிப்படுத்த முடியாத சங்கடமான சூழ்நிலையை அவருக்கும் ஏற்படுத்தும். செய்ய வேண்டிய உதவி அவரது சண்டித்தனங்கள் குறித்து நீங்கள் பொறுமை காப்பதே சிறந்தது. இந்த சூழ்நிலையில் நீங்கள் ஒரு பேசா பார்வையாளராக இருப்பது நல்லது. பிரசவ வேதனையில் இருக்கும் சில பெண்கள் நீங்கள் தொடுவதையோ அல்லது இதமாக தடவி கொடுப்பதையோ கூட விரும்புவதில்லை.

  எனவே பிரசவ வேதனையில் இருக்கும் தாயை மேலும் துயரப்படுத்தாமல் அந்த கட்டத்தை நீங்கள் கடந்து செல்ல வேண்டும். அவரது கர்ப்ப காலத்தில் அவர் கேட்டு மகிழ்ந்த சில மந்திரங்களை நீங்கள் இப்பொழுது உச்சரிக்கலாம் அல்லது இதமான இசையை ஒலிக்க செய்யலாம். அவருக்கு நீங்கள் தொடுவதின் மூலமோ அல்லது இதமாக தடவி கொடுப்பதன் மூலமோ நீங்கள் வழங்கும் ஆறுதல் பிடித்திருந்தால் நீங்கள் அதனை செய்யலாம்.

  இந்த வலி சிறந்தது

  அவருக்கு எந்த நினைவூட்டலும் தேவை இல்லை. ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக பிரசவ வேதனையில் தாங்க முடியாத வலியை அனுபவித்து கொண்டிருக்கும் பெண் தன் வலியை பொறுத்தே ஆக வேண்டும் என்பதை நன்கு அறிவார். ஆனால் அதனை நினைவுபடுத்த இது சரியான தருணம் அல்ல. அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது திரும்பி நில்லுங்கள். அனைவரும் இதனை கடக்க தான் வேண்டும் என்ற வார்த்தையை நீங்களும் கூட அவரிடம் கூறாதிருப்பதை உறுதி செய்யுங்கள். அந்த தருணங்கள் அவருக்கு அறிவை போதிக்க சிறந்ததல்ல.

  எவ்வாறு உதவுவது அவரிடம் எப்பொழுதும் வலியை பற்றியே பேசவோ அல்லது நினைவூட்டவோ செய்யாதீர்கள். வலி என்ற வார்த்தையை நீங்களோ அல்லது பிரசவ அறையில் இருக்கும் வேறு எவருமோ உச்சரிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

  குழந்தையை நீ துன்பப்படுத்துகிறாய்

  அந்த வாரத்தையை கூறுவதை நிறுத்துங்கள். கர்ப்ப காலத்தில் அவர் எவ்வளவு வலியை தாங்குகிறார் என்பது குறித்தும் குழந்தையின் நலத்தினைப் பொறுத்து எந்த அளவிற்கு தனது சௌகரியங்களை விட்டு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் நீங்கள் எதுவும் அறிந்திருப்பதில்லை. அவர் நிச்சயமாக அனைத்தையும் வேண்டுமென்றே செய்யவில்லை. பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணின் செயல்களை உங்களால் சமாளிக்க முடியவில்லை எனில் குழந்தையை சாதகமாக பயன்படுத்தி அவரை பயமுறுத்தாதீர்கள்.

  எவ்வாறு உதவுவது அவருக்கு ஆறுதல் அளிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருந்தாலும், உங்கள் முயற்சியை கை விட வேண்டாம். அவர் இன்னும் போராடி கொண்டிருக்கும் அதே வேளையில் நீங்கள் உங்கள் முயற்சியை தொடருங்கள்.

  கடினமாக உந்தி தள்ள இது சரியான தருணம்

  இந்த வார்த்தைகள் பொதுவாக மருத்துவர் அல்லது பரிதாப உணர்வற்ற அவரது உதவியாளரிடமிருந்து வருகிறது. ஆயினும் இந்த விஷயத்தில் செய்வதை விட சொல்வது எளிமையானது தான். செயல் முறையை கட்டளையாக வெளிப்படுத்தாமல், பொறுமையாக வெளிப்படுத்துபவருக்கு இது உதவும். எவ்வாறு உதவுவது இந்த சூழ்நிலையில் நீங்கள் மருத்துவரிடமோ அல்லது அவரின் உதவியாளரிடமோ கோபத்தை வெளிப்படுத்த முடியாது. அவரை நோக்கி மெதுவாக குனிந்து அவரின் காதுகளுக்கு அருகில் சென்று இதமாக மூச்சு விடும்படி கூறுங்கள்.

  மூச்சு விடுவதில் கவனமாக இருக்கும்படி தெரிவியுங்கள். மேலும் அவரது கர்ப்ப கால வகுப்புகளில், அவர் கற்று கொண்ட குறிப்புகளை முயன்று பார்க்கும்படி தெரிவியுங்கள். அவர் உங்கள் வார்த்தைகளை கவனிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் போதிலும், உங்களால் அதிகமாக செய்யக்கூடியது இது மட்டுமே. அவர் கர்ப்ப கால வகுப்புகளில் அவர் நுட்பமான விஷயங்களை கற்று கொண்ட போது, நீங்களும் உடனிருந்ததை உறுதி செய்யுங்கள்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t45873-topic#ixzz30935To8N 
  Under Creative Commons License: Attribution

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பிரசவ அறையில் பெண்ணிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது? Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top