சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!.. - தமிழர்களின் சிந்தனை களம் சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!.. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, April 29, 2014

  சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!..

  சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!..
                       
  மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.
  டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.

  குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.
  இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).
  மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.
  தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.
  நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
  திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
  மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.
  ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.
  இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.
  தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.
  எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.
  உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!.. Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top