விக்கல் தேவையான ஒன்றுதானா? - தமிழர்களின் சிந்தனை களம் விக்கல் தேவையான ஒன்றுதானா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, April 12, 2014

    விக்கல் தேவையான ஒன்றுதானா?


    நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
    தன்னிச்சையாக என்றால்...?
    உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.
    விக்கல் நமது உடலுக்கு தேவையான - பயனுள்ள ஒன்றுதானா என்றால், 'இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
    அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
    ஆனால், சிலருக்கு சில நாட்கள்வரை இந்த விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

    நன்றி: கூடல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: விக்கல் தேவையான ஒன்றுதானா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top